கல்லூரி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள் தொடரும்

சென்னை, ஏப்.9 கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியிலேயே மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்என பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கல்லுரிகளில் நேரடி வகுப்புகளுக்கு இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை.பேராசிரியர்கள் மற்றும் ஊழி யர்கள் மட்டும் தினமும் கல்லுரிகளுக்கு வந்து அங்கிருந்தவாறு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை நடத்த வேண்டும்.

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.எனவே தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியிலேயே வகுப்பும் தேர்வும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Comments