தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மய்யம்

 சென்னை, ஏப். 8- வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 9 முதல் 11 ஆம் தேதி வரை, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மய்யம் அறிவித்து உள்ளதுசென்னை வானிலை ஆய்வு மய்யம் தரப்பில் கூறப் பட்டுள்ளாவது:-

குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற் குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கா லில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப் பட்டு உள்ளது.

Comments