முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு


 புதுடில்லி, ஏப். 16- நாடு முழு வதும் 18ஆம் தேதி நடை பெறுவதாக இருந்த முது கலை மருத்துவ படிப்புகளுக் கான நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்தியாவில் கரோனா வின் 2ஆவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை யும் கடந்து மிகுந்த அதிர்ச் சியை கிளப்பி இருக்கிறது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் கூடும் நிகழ்வுகளை ரத்து செய்து வருகிறது.

இதில் குறிப்பாக மாணவர் களின் நலன்களை கருதி பல் வேறு தேர்வுகள் ஒத்திவைக் கப்பட்டும், ரத்து செய்யப்பட் டும் வருகின்றன. அந்தவகை யில் சி.பி.எஸ்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டும் உள்ளன.

இதைப்போல மாநிலங் களும் 10, 12ஆம் வகுப்பு தேர் வுகளை தள்ளிவைத்து நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில் வருகிற 18ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த மருத்துவ மேற்படிப்புகளுக் கான நீட் நுழைவுத்தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற் றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதை ஏற்றும் கரோனா வால் நாடு முழுவதும் எழுந் துள்ள அபாயத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வை மத்திய அரசு தள்ளி வைத்து நேற்று (15.4.2021) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகா தார அமைச்சர் ஹர்சவர்தன் தனது சுட்டுரைத் தளத்தில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு, 18ஆம் தேதி நடை பெற இருந்த முதுகலை மருத் துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இளம் மருத்துவ மாண வர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவ டிக்கையை மேற்கொண்டிருப் பதாகவும் அவர் அதில் குறிப் பிட்டு இருந்தார்.

Comments