ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுக்கும் மத்திய, மாநில அதிகாரி கள் எவராக இருந்தாலும், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிப்போம் என டில்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     தமிழ் நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக நாளை திங்கள் முதல் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித் துள்ளது. திரையரங்குகள், பெரிய கடைகள், மால்கள், மதுபார்கள், முடி திருத்தகங்கள் மூடப்படும். உணவு விடுதிகள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வழிபாட்டுத்தலங்களில் மக்கள் அனுமதி இல்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் அகமதாபாத்தில் திறந்து வைத்த மருத்துவமனை, நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகிறது.

·     கரோனா தொற்றை முழுவதுமாக வெற்றி கொண்டோம் என மார்தட்டிய மோடியின் பேச்சுக்குப் பிறகு கரோனா தொற்று அதிகரித்து, ஒவ்வொரு மாநிலமும் முழு அடைப்பை அறிவிக்க உள்ளது. தடுப்பூசியும், ஆக்சிஜனும் இல்லாமல் மக்கள் மரணம் அடையும் நிலை உருவாகியுள்ளது என காங்கிரஸ் தலைவர்

.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

·   கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளை போட்ட நாடுகள் இப்போது கோடைகாலத்திற்குள் தொற்றுநோய்க்கு முந்தைய இயல்புநிலையை அடைய முனைகின்றன. இந்தியர்களுக்கு தடுப் பூசிகள் பயனுள்ளவை என்பதை நாம் நிறுவும் வரை இந்த நாடுகளில் அவர்களின் எல்லைகள் இந்தியர்களுக்கு மூடப்பட்டிருக்கும் என் பதை தெளிவுபடுத்தியுள்ளன. நமது சிறந்த விஞ்ஞானிகளை பணியில் சேர்ப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்தியா நிலை தடுமாறிய கப்பலைப் போல உள்ளது என மூத்த எழுத்தாளர் தல்வீன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ஆக்சிஜன் உற்பத்தி, மற்றும் விலை குறித்து கடந்த நவம்பரிலேயே நாடாளுமன்ற குழு கடந்த நவம்பரில் அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அப்போதே காலியான படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து விலகிச் செல்லப்படுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசி கோவாக் சின் மாநில அரசுகளுக்கு ஒரு டோசுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயிக்கப்படும் என்று அதன் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா

25.4.2021

Comments