கரோனா நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பி தரும் தொழிலதிபர்.....

 லக்னோ, ஏப்.27 கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள  நிலையில் நாடு முழுவதும்பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் பலர் இறக்கின்றனர்.

  இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம்,  ஹமீர்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரு ரூபாய்க்கு நிரப்பி தந்து ஏழை கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வரு கின்றார். ‘ரிம்ஜிம் இஸ்பாட்தொழிற் சாலையின் உரிமையாளர் மனோஜ் குப்தா என்பவர் கரோனா நோயாளிகளுக்கு உதவுவ தற்காக ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண் டர்களை நிரப்பி வருகிறார். இதன் மூலம், நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிரை காப்பாற்றிஇருக்கிறார். இது குறித்து  அவர் கூறுகையில், ‘‘கடந்தாண்டு நானும் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப் பட்டேன். அப்போது, சுவாசிப்பதில் ஏற்படும் வேதனை என்ன என்று எனக்கு அனுபவரீதியாக தெரியும். அந்த வேதனையை அனுபவித்த தால்தான், நான் ஒரு ரூபாய்க்கு சிலிண்டர் களை நிரப்பி தருகிறேன். ஒரு நாளைக்கு ஆயிரம் ஆக்சிஜன்சிலிண்டர்களை எனது தொழிற்சாலையில் நிரப்ப முடியும்என்று தெரிவித்தார்.

Comments