கரோனா மரணத்தின் உண்மையை மறைக்கும் பா.ஜ.க. அரசு இறந்த உடல்களால் நிரம்பி வழியும் குஜராத் சுடுகாடுகள்

சூரத். ஏப். 12 கரோனா தொற்றால் இறந்த உடல்களை கையாள சுடுகாட்டுப் பணியா ளர்கள் சரிவர பயிற்சி அளிக்கப் படாத காரணத்தால் குஜராத் தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு உடல் களால் நிரம்பி வழிகின்றன

குஜராத்தில், சூரத், அகமதா பாத், ராஜ்கோட் மற்றும் வடோதரா ஆகியவை 4 முக்கிய மான நகரங்களாக திகழ்கின்றன. ஆனால், அந்த மாநிலத்தில், கரோனா பரவலின் இரண் டாவது அலை வீசும் நிலையில், கடந்த சில நாட்களாக, முக்கிய நகரங்களின் சுடுகாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்ததாக கூறப் படுகிறது. எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, உடல்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், மாநில அரசு, கரோனா இறப்புகளை குறை வாக குறிப்பிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. சூரத் நகரில் மட்டும் உள்ள முக்கிய சுடு காடுகளில், கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு, சராசரியாக 80 உடல்கள் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்நகரின் ஏகேசி சுடுகாடு, சுமாராக ஒருநாளைக்கு 35 உடல்களை மட்டுமே எரியூட்டும் வசதி கொண்டதாக கூறப்படு கிறது. ஆனால், சில நாட்களாக அங்குவரும் உடல்களின் ஒரு நாளைய எண்ணிக்கை 110 எனும் போது, நிலைமையின் தீவிரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதேசமயம், குஜராத்தில்,‍ கரோனா மரணத்தின் உண்மை எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை, அம்மா நிலத்தின் பாஜக முதல்வர் விஜய் ரூபானி மறுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பல மருத்துவமனைகள் நிரம்பி வழி கின்றன. அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சாலைகளில் கரோனா நோயாளிகள் படுத்துக் கிடக் கின்றனர். அவர்களுக்கு செவிலியர்கள் மருத்துவர்கள் சாலைக்கு வந்தே சிகிச்சை அளிக் கின்றனர். மருத்துவமனைக்கு அருகிலேயே உடல்களை கொண்டு செல்லும் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது,  இடமில்லாதவர்களில் சிலர் அந்தப்பெட்டிகளை எடுத்து வந்து அதன் மீது படுத்து சிகிச்சை பெறும் அவலமும் குஜராத்தில் நடந்து வருகிறது.

Comments