புதுச்சேரி த.கண்ணன் மறைவு: இறுதி நிகழ்வு - இரங்கல் உரை

புதுச்சேரி, ஏப். 21- புதுச்சேரியில் மிகச் சிறப்பாக தந்தை பெரியாரின் கொள் கைகளை பரப்புவதில் தீவிர பங்காற் றிய கழக செயல்வீரர் மயிலாடுதுறை என்.வடிவேல் அவர்களின் மருமகன் பெரியார் தொண்டர் .கண்ணன் உடல் நலம் இன்றி ஜிப்மரில் சிகிச்சை பெற்று தேறிய நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு 15.4.2021 அன்று மாலை 6.05 மணி அளவில் மறைவுற்றார்.

புதுச்சேரி சுதானா நகர் விரிவு 3 நைனார் மண்டபம், அண்ணா வீதி யில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப் பட்டிருந்தது. தனபால் - சிவகாமி இவர்களின் இளைய மகனான .கண் ணனின் இணையர் .பானுமதி, மகன் கள் வீரமணி கண்ணன், செல்லமணி கண்ணன், மைத்துனர்கள் .செங் குட்டுவன், .சேட்டு, மருமகள்கள், பேரன், பேத்திகள் இறுதி மரியாதை செய்தனர். கண்ணன் இறப்பு செய்தி அறிந்த திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கல் செய்தி வெளி யிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம் சார்பில் கழக பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர் என குறிப் பிட்டிருந்த நிலையில், 16.4.2021 அன்று காலை 11 மணி அளவில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பெரியார் பெரும்பணியாற்றுவதில் செயல்வீரர் .கண்ணன் என இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.

புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மண்டல கழக அமைப் பாளர் இர.இராசா, மண்டல செயலா ளர் கி.அறிவழகன், .கண்ணன் உற வினர் பி.எஸ்.என்.எல். கோவிந்தராஜ், புதுச்சேரி சட்டகல்லூரி ஆட்டோ சங்கம் கலைமணி, பொதுக்குழு உறுப் பினர் லோ.பழனி, புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் தி.இராசா, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், மேனாள் கழக செயலா ளர் வே.அன்பரசன், பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் மூலை குளம் கோ.மு.தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் கே.வி.இராசன், வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு.சி.திராவிடச்செல்வன், .சிவராசன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார், மு,குப்புசாமி, புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா, கொம்யூன் கழகத் தலைவர் செ.கா.பாஷா, புதுச்சேரி மார்க்சிய பெரியா ரிய பொதுவுடைமை கட்சித் தலைவர் தோழர் இரா.திருநாவுக்கரசு, செயலா ளர் சீனு.சந்திரசேகரன், தோழர் இளங்கோ, கோட்டைமேடு சுரேஷ், சட்டகல்லூரி ஆட்டோ சங்க தலை வர் சுப்ரா, புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட் டமைப்பு செயலாளர் தோழர் காளி தாஸ், எழுத்தாளர் கவிஞர் சீனு. தமிழ்நெஞ்சன், கழக இளைஞரணி மேனாள் அமைப்பாளர் தோழர் .முகேஷ், முதலியார்பேட்டை தி.மு.. சட்டப்பேரவை வேட்பாளர் வழக்குரைஞர் எல்.சம்பத் ஆகியோர் மலர் வளையம் வைத்து இரங்கல் உரையாற்றினர். கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், மகளிரணி சரஸ்வதி தீனதயாளன், தோழர்கள் களஞ்சியம் வெங்க டேசன், கு.உலகநாதன், ஆட்டோ ஆரோக்கியநாதன், நாராயணன், மாறன், கோவிந்தன், பெரியார் சிந்த னையாளர் இயக்கம் பரத், சிவக்குமார், .கண்ணன் மைத்துனர் குலோத்துங் கன், மாசேதுங், பெரியார் பெருந் தொண்டர் எஸ்.கிருஷ்ணசாமி, மூலைக்குளம் சாம்பசிவம், .கண் ணன் - பானுமதி வடிவேல் உறவினர் கள் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிப் பொறுப்பாளர்கள் திரளாக இறுதி மரியாதை செய்தனர். பகல் 1.30 மணிக்கு இறுதி ஊர்வலம் வீர வணக்க முழக்கத்துடன் புறப்பட்டு தேங்காய் திட்டு மயானத்தை அடைந் தது. தோழர் .கண்ணன் அவர்களின் மகன்கள் வீரமணி, செல்வமணி ஆகியோரின் விருப்பப்படி எவ்வித மூடப்பழக்க வழக்க சடங்குகள் இன்றி அடக்கம் செய்யப்பட்டது. வே.அன்பரசன் வீரவணக்க முழக் கத்துடன் கண்ணனுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.

குறிப்பு: புதுச்சேரி ஆட்டோ சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். கழக பிரச்சாரப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட் டவர். கழக போராட்டங்களில் ஈடு பட்டு பலமுறை கைதானவர். மாநாடு, பொதுக்கூட்டங்களில் முதல் ஆளாக புறப்படுகிற தோழர் .கண்ணன் என் பதும் விடுதலை சந்தா சேர்ப்பதிலும் தேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக் கது. .கண்ணனின் மாமனார் வடி வேல், மொழிப் போர் தியாகி, சட்ட எரிப்புப் போராட்ட வீரர் என்றால் அவரது தந்தை தனபால் புதுச்சேரி சுதந்திர போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பெரியார் படிப்பகம், சிறுகானூர் பெரியார் மய்யம் ஆகிய வற்றுக்கு தன்னாலான நிதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments