ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்

தஞ்சை தி.மு.. முன்னணித் தலைவர் களில் ஒருவரும் இலக்கியச் செல்வருமான முன்னாள் அமைச்சர் மானமிகு எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களது துணைவியார் திருமதி. ஜென்னத் பீவி (வயது 80) அவர்கள் இன்று (28.4.2021) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது மறைவால் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ள அருமை நண்பர் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

28-04-2021

குறிப்பு: தமிழர் தலைவர் அவர்கள் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர்

சு.முருகேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

இரா.வெற்றிக்குமார் மண்டல மகளிரணி செயலாளர்

.கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments