அண்ணா பல்கலை. நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

வைகோ வலியுறுத்தல்    

சென்னை, ஏப்.18அண்ணா பல்கலை, இணையதள தேர்வு முடிவுகளை, உடனடியாக மறு ஆய்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முடிவு களை வெளியிட வேண்டும்என, .தி.மு.., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவரதுஅறிக்கை வருமாறு:

அண்ணா  பல்கலை, பொறி யியல் கல்லூரி மாணவர்களுக் கான பருவத் தேர்வுகளை, மார்ச் மாதம், ‘இணையதளம்வழியே நடத்தியது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வு எழுதினர்.

ஏப்., 10இல் முடிவுகள் வெளியாகின. இதில், 40 சதவீத மாணவர்கள் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர்.

முறைகேடுகளில் ஈடுபட்ட தால், லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த காலங்களில், தேர் வில் ஒரு முறை கூட தோல்வி அடையாத மாணவர்கள், மூன்று, நான்கு பாடங்களில், தோல்வி அடைந்துள்ளனர்.

இணையதளத்தில் தேர்வு எழுதும் போது, சற்று தொலை வில், பெற்றோர் இருந்தாலும், அதை முறைகேடு என, ‘கம்ப் யூட்டர்கள் பதிவு செய்துள் ளன.

மேலும், கல்லுரி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, சில மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளதாக தெரி

கிறது.

இத்தகைய குளறுபடி களால், பல்லாயிரக்கணக்கன மாணவர் களும், அவர்களின் பெற்றோரும், மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளனர்.

ஒன்றரை லட்சம் மாண வர்கள், முறைகேடு செய்ததாக கூறு வதும், தேர்வு எழுதாத மாணவர்கள், சிலர் தேர்ச்சி பெற்ற தாகவும், அறிவிப்புகள் வெளியாகி இருப்பது, அண்ணா பல்கலையின் நம்ப கத்தன்மையை கேள்விக்குள் ளாக்கி இருக்கிறது.

எனவே, தேர்வு முடிவுகளை உடனடியாக மறு ஆய்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட் டுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை, கால தாமதமின்றி வெளியிட வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள் ளார்.

Comments