மக்களைச் சுட்டுக்கொலை செய்த பாதுகாப்புப் படையினருக்கு பா.ஜ.க. வேட்பாளர் விருந்துகொடுக்கும் காட்சி!

கொல்கத்தா, ஏப். 17 மேற்குவங்கத்தில் 10.04.2021 அன்று நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது கலவரம் செய்ததாகக் கூறி ரானக்காட் சட்டமன்ற தொகுதியில் பாது காப்புப் படையினர் சுட்டதில்

6 பேர் உயிரிழந்தனர்.  இது திட்ட மிட்டப் படுகொலை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா கூறிவந்த நிலையில் அவர் மீது பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேசுகிறார் என்று கூறி  ஒரு நாள் பரப்புரை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது,

 இந்த நிலையில்  பாதுகாப்புப் படையிருக்கு அப்பகுதி பாஜக வேட்பாளர்  விருந்து கொடுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான படம் வெளி யாகியுள்ள நிலையில் திரி ணாமூல் காங்கிரசைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர், மகுவா மொய்த்ரா இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமா? பாஜக வினர் திட்டமிட்டே வாக்களிக்க யாரும் வரக்கூடாது என்று மிரட்டும் நோக்கில் மக்களைச் சுட்டுக் கொன்றனர் என்று எங்கள் முதல்வர் கூறும் போது அவரது கருத்தை தவறு என்று கூறிய தேர்தல் ஆணையம் பாதுகாப்பு படையினருக்கு அப்பகுதி பாஜக வேட்பாளர் விருந்து கொடுத்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு முன்பாக துப்பாகிச்சுடும் குழுவினரோடு சில பிரமுகர்கள் எடுத்துக் கொண்ட படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments