இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்குவதா?

 ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்

 கான்பெர்ரா,ஏப்.19- இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கும் ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை காவல் துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரே லியாவை மய்யமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல் களைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர் களை கண்காணிக்கவுமே உத வும்," என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கிய ஆள்கடத்தல் செயல் களை கண்காணிக்கும் விதமாக 5 கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கியிருந்தது.    

சட்டவிரோத படகுப்பயணம் மற்றும் ஆள்கடத்தல் செயல்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல் களை தடுக்கும் நோக்கத்தில் இலங்கைக்கு இந்த ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங் கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஆள் கடத்தல் கண்காணிப்பு நடவடிக்கை களுக்கு மட்டுமல்லாமல், இயற்கைப் பேரழிவின் போது மீட்புப் பணிகளுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவும் இலங் கையும் கூட்டாக வேலை செய் வதன் மூலம், ஆஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமாக மேற் கொள்ளப்படும் படகுப் பயண முயற்சியில் ஒருபோதும் ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்ட விரோத குடியேறிகளால் வெற்றி யடைய முடியாது என்னும் எச்சரிக்கை செய்தியை விடுக்கி றோம்," எனக் கூறியிருந்தார் ஆஸ்திரேலியாவின்ஜாயின்ட் முகவர் டாஸ்க் ஃபோர்சின் தளபதி மார்க் ஹில்.

இந்த ட்ரோன்கள் ஆள் கடத்தல் செயல்களை கண்டறிவ தற்கும் சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவக்கூடி யவை என ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் மூத்த அதிகாரி ராப் வில்சன் கூறியி ருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments