எதிர்க்கட்சியினர் வீடுகளில் திடீர் வருமான வரி சோதனை கைப்பற்றியது ஒன்றுமில்லை; அதிகார முறைகேடு அம்பலமானது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

எதிர்க்கட்சியினர் வீடுகளில் திடீர் வருமான வரி சோதனை கைப்பற்றியது ஒன்றுமில்லை; அதிகார முறைகேடு அம்பலமானது!

ஏப்ரல் 6 ஆம் தேதி பாடம் கற்பிப்பீர்!

மத்திய பா... தலைமையிலான அரசு - தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினர் வீடுகளில் (தி.மு..வினர்) வருமான வரித் துறைமூலம் திடீர் சோதனைகளை நடத்துவது - அதிகார  முறைகேடு - ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடக்க விருக்கும் தேர்தலில் வாக்குச் சீட்டுமூலம் இவர் களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு..மீது களங்கம் கற்பிக்கும் நோக்கம்!

தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற இடையில் மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில், தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடையப் போகும் தி.மு.. வின்மீது களங்கம் ஏற்படுத்தியும், அச்சுறுத்தியும், வாக்காளர்களிடத்தில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலும், ‘‘வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு  சாகப் போகிறவன் கையில் ஒரு துரும்பு கிடைத்தாலும் அதைப்பற்றிக் கொண்டு கரை ஏறலாம்'' என்ற நப்பாசையில், பா...வும், ...தி.மு..வும் நினைப்பதாகத் தெரிகிறது.

அதன் விளைவுதான் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் மகள் வீட்டிலும், தி.மு.. வேட் பாளர்களான சென்னை அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் எம்.கே.மோகன், அரவக்குறிச்சி தி.மு.. வேட்பாளர் செந்தில்பாலாஜி வீடுகளிலும் நேற்று (2.4.2021) வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

12 மணிநேரம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ‘‘விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை'' என்பதற்கேற்ப - நேரக்கேடு - முயற்சி கேடே தவிர, கைப்பற்றியது ஒன்றும் இல்லை - ஒன்றுமே இல்லை.

தளபதி மு..ஸ்டாலின் மகள் திருமதி செந்தாமரை வீட்டில் ரூபாய் ஒரு லட்சத்து 36 ஆயிரமும் (குடும்பச் செலவிற்காக வங்கியில் எடுக்கப்பட்ட விவரமும் உள்ளது), செந்தில்பாலாஜி வீட்டில் ரூபாய் 8 ஆயிர மும், எம்.கே.மோகன் வீட்டிலிருந்து  வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூபாய் 4 இலட்சத்தில் முறையான செலவு போக ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் கைப்பற்றி முறையான கணக்கு இருந்ததால், அந்தத் தொகைகளை உரியவர்களிடமே ஒப்படைத்து வரு மான வரித் துறையினர் வெறுமனே வெளியேறினர்!

எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தனர்!

பாவம், ஏதாவது கிடைக்கும், துரும்பைத் தூணாக்கி விளம்பரப்படுத்தி கடைசி நேரத்தில் தேர்தலில் ஒரு கை பார்க்கலாம் என்று எதிர்பார்த்துக் கிடந்த பா... - ...தி.மு..வினருக்கு அதிர்ச்சி யும், ஏமாற்றமும் போட்டிப் போட்டுக்கொண்டு தாக்கி யிருக்கின்றன. அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன?

2017 ஆர்.கே.நகரில் நடந்தது என்ன?

2017 ஏப்ரலில் சென்னை - இராதாகிருஷ்ணன் நகரில் (ஆர்.கே.நகரில்) நடைபெற்ற இடைத் தேர்தலின்போது வருமான வரித் துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட 32 இடங் களில் சோதனையில் ஈடுபட்டனர். அத்தொகுதியில் மட்டும் ரூ.89 கோடி கைப்பற்றப்பட்டது.

அதில், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகள், வாக்காளர்கள் எண்ணிக்கை - பொறுப்பாளர்கள் - ஒதுக்கப்பட்ட தொகைபற்றிய விவரங்கள் எல்லாம் இடம் பெற்றனவே! (பெட்டி செய்தி காண்க).

அவற்றின்மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? இதுவரை ஏதாவது தகவல் உண்டா?

அந்தக் காலகட்டத்திலும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா... ஆட்சிதானே - தமிழ்நாட்டிலும் ...தி.மு.. ஆட்சிதானே!

நேர்மையா - உள்நோக்கமா?

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரித் துறைமூலம் திடீர் சோதனை நடத்துவதில் நேர்மை உண்டா - உள்நோக்கம் உண்டா? என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

இத்தகு குறுக்கு வழிகள் - அத்துமீறல்கள், அதிகார முறைகேடுகள் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் - ஏற்படுத்தவும் போகிறது.

அதிகார முறைகேடர்களைத் தண்டிப்பீர்!

வாக்காளப் பெருமக்களே!

அதிகார முறைகேடர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று வாக்குச்சீட்டு ஆயுதத்தின்மூலம் தண்டனை  தாரீர்! தாரீர்!!  என்று  கேட்டுக்கொள்

கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

3.4.2021

No comments:

Post a Comment