சனி, ஞாயிறு, விடுமுறை நாள்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

சென்னை, ஏப்.11 கரோனாவை ஒழிக்க சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித் துள்ள தமிழக அரசு, வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் புதிய கட்டுப்பாடு களையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று (10.4.2021) அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11ஆம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்படுகின்றன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாள்களிலும், பொதுமக்கள் கூடு வதற்கு தடை விதிக்கப் படுகிறது.

இரவு 10 மணி வரை அனுமதி

அனைத்து வழிபாட்டு தலங் களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனு மதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழி பாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்

டுள்ளது.

Comments