ராமன் கோயில் நாணயம் இதுதான்!

ரூ.22 கோடி மதிப்பில் தொகை பெற முடியாமல் திரும்பிய  15 ஆயிரம் காசோலைகள்

அயோத்தி,ஏப்.17- அயோத்தியில் ராமன்கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் வசூலித்த 22 கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், ராமன் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படும் நிலையில், இறுதித் தொகை அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப் படவில்லை. இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக் கப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் கணக்கில் பணம் இல்லாதது உள்பட பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத் தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சமாளிக்கிறது

Comments