காவல்துறையினருக்கு ஆணையர் அறிவுரை

 சென்னை, ஏப்.22   இரவு நேர ஊரடங்கில் கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்தும் அதேவேளை, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நடைமுறை களுக்குட்பட்டு உரிய தேவைகள் மற்றும் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக செல்லும் பொதுமக்களை அனுமதிக்கலாம். அதுவும் உரிய ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் போன்ற அறிவுரைகளையும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கிடாக்கி கருவி மூலம் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் இரவு நேர ஊரடங்கில் பொதுமக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments