காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்

 புதுடில்லி, ஏப்.18 காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.

காசோலை மோசடி வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அரசியல்சாசன அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி நடை பெற்ற விசாரணையில் பிறப்பித்த உத்தரவில், காசோலை மோசடி போன்ற வழக்குகளை விரைவில் விசாரிக்க பரிந்துரைகளை வழங்க மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி.சவுகான் தலைமையில் குழுவை அமைக்கிறோம். நாடு முழு வதும் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கான பரிந்துரைகளை இக்குழு 3 மாதத்துக்குள் அளிக்கும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று  (17.4.2021)மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

காசோலை மோசடி வழக்குகளில் உடனடியாக விசாரணையைத் தொடங்காமல், குற்றம்சாட்டப் பட்டவருக்கு முதலில் தாக்கீது அனுப்ப வேண்டும். தாக்கீதுக்கு கிடைக்கும் பதிலை வைத்து விசா ரணையை தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும், விசாரணை நீதிமன்றங் களுக்கு நடைமுறை உத்தரவுகளை உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்.

காசோலை மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் நபர் நீதிமன் றத்தின் அதிகார எல்லைக்கு அப் பால் வசிக்கும்போது, போதுமான முகாந்திரங்கள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்.

காசோலை மோசடி வழக்குகளில் சாட்சியாக உள்ள புகார்தாரர் அளிக்கும் உறுதிப் பத்திரத்தையே சாட்சியாக கொள்ள வேண்டும். புகார்தாரரை நீதிமன்றத்துக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை.

ஓராண்டுக்குள் ஒரே பணப் பரி மாற்றம் தொடர்பாக ஒரே நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் காசோலை மோசடி வழக்குகள் அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருத்தல் வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

காசோலை மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அளிக்கப்படும் ஒரு தாக்கீதை அவர் தொடர்புடைய அனைத்து காசோலை மோசடி வழக்குகளுக்கும் தாக்கீதாக கருத வேண்டும் என தெரிவித்து விசாரணை நீதிமன்றங்களுக்கு நடைமுறை உத்தரவுகளை உயர்நீதி மன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தை 8 வாரங்கள் கழித்து, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிட வும் உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 35 லட்சம் காசோலை மோசடி வழக் குகள் நிலுவையில் இருப்பதும், இந்த வழக்குகளை விரைவில் விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த முடியுமா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி

25-ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கவை.

Comments