வலங்கைமானில் நடைபெற்ற இணையேற்பு விழா

வலங்கைமான் ஒன்றிய கழகத் தோழர்கள் அய்யாப்பிள்ளை - ஜீவராணி ஆகியோரின் மகன் சிரஞ்சீவிக்கும் செல்வி மகாதேவிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 25.4.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வலங்கைமான் தென்றல் திருமண மகாலில் தஞ்சை மண்டல செயலாளர் .குருசாமி தலைமையில் மாவட்ட தலைவர்

கு. நிம்மதி முன்னிலையில் நடைபெற்றது. மணமக்களை துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திரிபுரசுந்தரி, ஒன்றிய செயலாளர் .பவானி சங்கர், குடந்தை பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், வலங்கைமான் கழகத் தோழர்கள் சி.இராமசந்திரன், மா.வீரமணி, பத்மநாபன் பரிமளா, திரு விடைமருதூர் ஒன்றிய செயலாளர் .சங்கர், ஒன்றிய து.செயலாளர் நாச்சியார்கோயில் குணா, சுதன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் தினேஷ் மற்றும் வலங்கை ஒன்றிய முக்கியப் பொறுப்பாளர்கள் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். வருகை தந்தோரை வலங்கை ஒன்றிய தலைவர் நா.சந்திரசேகரன் வரவேற்றும் வலங்கை மகளிரணி தோழியர் ஜுவாராணி நன்றி கூறியும் உரை யாற்றினர். கரோனா விதிமுறைகளை பின்பற்றி சுயமரியாதை திருமண விழா இனிதே நடைபெற்றது.


Comments