திண்டிவனத்தில் புரட்சிக்கவிஞர் நினைவு நாள்

திண்டிவனம்,ஏப்.24- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு  21.4.2021 அன்று காலை 10.00 மணியளவில்  திண்டிவனம் நகரில் அமையப்பெற்றுள்ள புரட்சிக்கவிஞர்  சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பாகவும்,விழுப்புரம்  மாவட்ட தமிழ் சங்கத்தின் சார்பாகவும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் செ.பரந்தாமன், பகுத்தறிவாளர் கழகம் ரா.அன்பழகன், நகரத் தலைவர் பா.வில்லவன் கோதை, அச்சரபாக்கம் ஒன்றிய செயலாளர் .பச்சையப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  மு.ரமேஷ்,தா.தம்பி பிரபாகரன், சூ.பன்னீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments