கரோனா: உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத், ஏப். 21-- உத்தரப் பிரதேச அரசு கரோனா அதி கரிப்பைச் சரிவர கட்டுப்படுத் தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகா பாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதில் மகாராட்டிர மாநிலம் முதல் இடத்திலும் உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.   இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கு மேல் உள் ளது.   உத்தரப்பிரதேச முதல் வரே கரோனாவால் பாதிக் கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில அரசு கரோனா அதிகரிப் பைத் தடுக்க சரியான நட வடிக்கைகள் எடுக்கவில்லை என அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.  இந்த வழக்கை விசா ரித்த அலகாபாத் நீதிமன்றம் 5 முக்கிய நகரங்களான, லக்னோ, கான்பூர், வார ணாசி, பிரயாக்ராஜ், மற்றும் கோரக்பூர் ஆகிய மாநிலங் களில் வரும் 26 ஆம் தேதி வரை முழு ஊரடங்குக்கு உத்தரவு இட்டது.

மேலும் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.   நீதிமன்ற உத்தர வில், “எந்த ஒரு நாகரீகம் அடைந்த மாநிலத்திலும் மக்களுக்குச் சுகாதார வசதி கள் இந்த கடுமையான நேரத் தில் கிடைக்காமல் மருத்துவ தேவையால் உயிர் இழந்தால் அங்கு சரியான முன்னேற்றம் இல்லை எனப் பொருளாகும்.

இது மாதிரியான மோச மான சுகாதார சூழலின் போது அரசு தனது ஜனநாயக பொறுப்பைச் சரிவர நிறை வேற்றாமல் உள்ளது.   ஜனநா யக அரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடைபெறும் அரசு என்பதை நாம் மறக்கக் கூடாது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு இருந்தால் மட்டுமே உரிய சிகிச்சை கிடைக்கிறது.

ஆனால் ஒரு ஜனநாயக அரசில் அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டு நவீன யுகத்தில் இது போல மக்கள் தேவை யான மருத்துவ வசதி இன்றி மடிவது  அரசு இந்த கொள்ளை நோய் பரவும் கால கட்டத்தில் சரி வர தனது கடமையைச் செய்யவில்லை என்பதே பொரு ளாகும்.   கடந்த ஒரு ஆண்டாக இந்த நிலை நீடித்தும் அரசு இதில் எந்த பாடமும் கற்றுக் கொள்ளாமல் உள்ளது.  உலக மக்கள் நமது நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் உள்ளது,  ஆனால் மக் கள் மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லை எனக் கூறும் போது நிச்சயம் நம்மைப் பார்த் துச் சிரிப்பார்கள்.” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத் தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   நேற்று ஒரே நாளில் இக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதிப்பு அடைந்துள் ளனர்.   அதற்கு முன் தினம் 27 ஆயிரத்துக்கும் அதிகமா னோருக்கு பாதிப்பு உறுதி ஆனது. இந்த நிலையில் அங்கு நிர்வாகம் என்பது எப்படி உள்ளது என்றே தெரியவில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதி சாமியார் முதல்வ ருக்கு தொற்று உறுதிசெய்யப் பட்ட பிறகு கடந்த 8 நாட் களாக அவர் குறித்த எந்த செய்தியும் வரவில்லை. 18 ஆம் தேதி அவர் தீவிர சிகிச் சையில் உள்ளதாக செய்திகள் வெளியாயின. இருப்பினும் அது குறித்த எந்த ஒரு தகவ லையும் உத்தரப் பிரதேச அரசு மக்களுக்குத் தெரிவிக்க வில்லை.  முதல்வரின் உத்தரவு இல்லாமல் நிர்வாகத்தினர் எந்த ஒரு முடிவையும் எடுக் காமல் இருக்கின்றனர். இத னால் நிலமை மேலும் மோச மாகிக்கொண்டு வருவதால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Comments