விமானப்படையில் காலிப் பணியிடங்கள்

இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு 1515 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எம்.டி.எஸ்., 404, ஹவுஸ்கீப்பிங் 345, மெஸ் ஸ்டாப் 190, குக் 124, ஸ்டோர் சூப்பரிடென்டன்ட் 66, எல்.டி.சி., 53, சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 49, பயர்மேன் 42, ஸ்டெனோ 39, கார்பென்டர் 31, பெயின்டர் 27 உட்பட மொத்தம் 1515 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித் தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விவரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

வயது: 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, திறன் (Skill) தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து, எந்த விமானப்படை மய்யத்துக்கு விண்ணப்பிக்க விருப்பமோ, அந்த முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசிநாள்: 2.5.2021.

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf


Comments