அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவர் தோழர் ஜே. பார்த்தசாரதிக்கு நமது வீர வணக்கம்

அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல்  தலைவரும், "வாய்ஸ் ஆஃப் ஓபிசி" என்ற தமிழ் - ஆங்கில மாத இதழின் ஆசிரியருமான தோழர்

ஜே. பார்த்தசாரதி அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (15.4.2021) காலமானார் என்ற செய்தி நமக்கு மிகுந்த அதிர்ச் சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சமூகநீதிப் போராளியான அவர் சிறந்த பண்பாளர். நம்மிடம், திராவிடர் கழகத்தினரிடம் மிகுந்த பற்றுக் கொண்டு நம்மை சமூகநீதிக் களத்தில் ஊக்கப்படுத்திய பெருமகனார் ஆவார்!

அவ்வமைப்பு சிறந்தோங்கி வளர்ந்து அகில இந்திய அளவில் பயன் தருவதற்கு கடும் உழைப்பைத் தரும்  தோழர் கோ. கருணாநிதி அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

எவரிடத்திலும் மிகவும் தன்மையோடு பழகுபவர்.

அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; சமூகநீதி அமைப்புகளுக்கும், திராவிடர் கழகத்திற்கும்கூட பெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், வங்கி அமைப்புகள், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர்  கூட்டமைப்பினர்  ஆகியோருக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்   

சென்னை      

15-4-2021          

Comments