வாட்ஸ்அப் மூலம் பா.ஜ.க. பிரச்சாரம்: புதுச்சேரியில் வழக்கு

 புதுச்சேரி, ஏப். 4- புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டிபாஜக சார்பில், வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சி யில் சேருமாறு, ஆதார்எண் இணைக் கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இது சர்ச் சையானது இதுகுறித்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கின் 1.4.2021 அன்று விசாரணையின்போது, புதுச்சேரி மாநி லத்தில் பாஜகவை தடை செய்ய வேண் டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம்  24ஆம் தேதி விசாரணையின்போது,  இது தொடர்பாகப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். எப்படி வாக்காளர்களின் அலைபேசி எண் கிடைத்தது? அதை எப்படி அரசியல் கட்சி பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுச் சேரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் மார்ச் 26ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது, இது தொடர்பாக  புதுச்சேரி பாஜக விற்குத் தேர்தல் ஆணையம் காரணம் கேட்டு தாக்கீது அனுப்பியதாக தெரி விக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணை யத்தின் விளக்கம் சரியாக இல்லை என அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, ஆதார் தகவல் எப்படி கசிந்தது என மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் துள்ளார். அதற்கு தேர்தல் ஆணையம் முன்பே விசாரணை நடத்தியிருக்க வேண்டாமா என்று  கேள்வி எழுப்பிய துடன், புதுச்சேரி பாஜக தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக என்னநடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் அறிக் கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஆதார் எண் கசிந்தது எப்படி என்ற தேர்தல் ஆணையத்தின் புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆதார் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டது.  வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அடுத்த விசாரணை  மார்ச் 30ஆம் தேதி அன்று நடைபெற்றது.  அப்போது, “இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, புதுச்சேரியில் ஏன் தேர்த லைத் தள்ளிவைக்கக் கூடாது?” என்றும் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், வழக்கின் உண்மைத் தன்மை தெரியாமல் தேர் தலை தள்ளிவைப்பது சரியாக இருக் காது என்று கூறினர்.

விசாரணையின்போது, மனுதாரர் ஆனந்த் சார்பில் ஆஜரான வழக்குரை ஞர், “சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும் 950க்கும் மேற்பட்டவாட்ஸ்-அப்' குழுக்களை உருவாக்கியுள்ளனர். அதற்குரிய அலை பேசி எண்கள், இந்த குழுவிற்குஅட்மின்' என இவ்வளவு பெரிய வேலை எப்படி நடந்தது? வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடிய பாஜக, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருக்கிறது. இது வாக்காளர்களின் தனி உரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகச் செயல் பட முடியுமென்றால், இந்த வழக்கின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். ஆதார் ஆணையமும் எங்களிடம் இருந்து தகவல்கள் திருடப்படவில்லை என்று விளக்கம் அளித்தது. பாஜக தரப் பில் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக் காளர்களின் அலைபேசி எண்களை சேகரித்தாக கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு1.4.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வைகை, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜகவின் புதுச்சேரி பிரிவின் அங்கீகாரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் , தேர்தல் ஆணையம் கூறுவது போல, தேர்தல்  நடத்தை விதிகளை மீறியதற்காக புதுச்சேரி பாஜக பிரிவு. அதன் செலவுக் கணக்கில் ரூ .14 லட்சம் சேர்க்கப்படுவது மட்டும் போதாது. பாரதிய ஜனதா கட்சியை இடைக்கால தடை செய்ய வேண்டும் என   வலியுறுத் தினார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதி பதிகள்,  வாட்ஸ்அப்' மூலம் டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக வாக்காளர்களின் அலைபேசி எண்களை சேகரிக்க  கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்றதாக பாஜகவின் புதுச்சேரி பிரிவு கூறுகிறது.  அவர்கள்  வீடு வீடாக பிரச்சாரம் செய் திருக்கலாம். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையத்தின்  முன் ஒப்புதல் ஏன் பெறப் படவில்லை என்று கேள்வி எழுப்பிய துடன், குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்த பா...வின் நட வடிக்கை தனி மனித உரிமை மீறல் என கூறியது.

Comments