தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மகன் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - ஆறுதல்!

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களது மகன்  அஷிஸ் யெச்சூரி  (வயது 35) கரோனா - கொடுந்தொற்று காரணமாக டில்லி அருகேயுள்ள குருக்கிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (22.4.2021) காலை மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்!

கொடுந்தொற்று காலத்தில் கொள்கைப் போராட்டம் நடத்துவதில் சளைக்காது சமர்புரியும் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, வாழ்க்கையில் இப்படி ஓர் ஏற்படக்கூடாத இழப்பு ஏற்பட்டுள்ளது நமக்குப் பெரு வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது!

ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அக்கட்சியினருக்கும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆறுதல் அடைவார்களாக!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

22.4.2021           

Comments