முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்

சென்னை, ஏப்.9  கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில்

தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10ஆம் தேதி முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments