தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை போர்க்கால அடிப்படையில் அனுப்ப வேண்டும்

 மத்திய அரசுக்கு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, ஏப்.15 அனைவருக்கும் தடுப்பூசி என்று கொள்கை முடிவு எடுத்து, தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை போர்க்கால அடிப் படையில் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு தி.மு.. தலைவர் தளபதி  மு..ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (14.4.2021)வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

 தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளதாக மத்திய அரசின் மக்கள் நல் வாழ்வுத்துறை இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பிற்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்? ஏன் .தி.மு.. அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப் பெறவில்லை? தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஒரு பேட்டியில், தடுப்பூசி பயன்பாட்டின் அடிப்படையில்தான் மத்திய அரசு தடுப்பூசி விநியோகம் செய்கிறது. குறைவாக ஊசி போட்டுக் கொண் டால் தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாகவே இருக்கும் என்கிறார். அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில் விநியோகம் செய்வதற்குப் பதில் மாநிலத்தில் போடப்படும் தடுப்பூசியின் அடிப் படையில்தான் விநியோகம் என்று மத்திய பா... அரசு முடிவு எடுத் திருந்தால், அது எவ்வளவு மோசமான மக்கள் விரோத முடிவு? ஏன் இதை .தி.மு. அரசு எதிர்க்கவில்லை?

விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை

உயிர்காக்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் அதற்கு மத்திய அரசும், .தி.மு.. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாது காப்புப் பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான்.

தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண் ணிக்கையை வைத்தே தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய பா... அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடை முறை. இது மாதிரி தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி விநியோகம் செய்வதில் அறிவியல்பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும்.

அதிமுக அரசும் மத்திய பா... அரசும் தோல்வியடைந்து விட்டது

கடந்த 8-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப் புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் .தி.மு.. அரசு மட்டுமல்ல, மத்திய பா... அரசும் தோல்வியடைந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.

எனவே, கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க் கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய பா... அரசை குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவி, பொது இடங்களில் தனிமனித இடை வெளிவிட்டு கரோனா தொற்றினை தடுப்பதற்கான தமிழக அரசு அதி காரிகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என் றும், அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அன் புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

Comments