மருத்துவம் சாராத பணிகளுக்கு திரவ ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி,ஏப்.26- இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கான மருந்துகள், உபகரணங்கள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, திரவ ஆக் சிஜன் பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் அவர் கூறியிருப்பதாவது;-

எந்த ஒரு நிறுவனமும் மருத்துவம் சாராத பணிகளுக்கு திரவ ஆக்சிஜனை பயன்படுத் துவதற்கு மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது. இதன் மூலம் மருத்துவப் பணிகளுக்கு ஆக்சிஜன் வரத்து அதிகரிக்கும். ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜனை மருத்துவப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அரசுக்கு வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இது செயல்பாட்டில் இருக்கும்.”

இவ்வாறு அஜய் பல்லா அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Comments