செய்தியும், சிந்தனையும்....!

 ‘‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!'' - வள்ளலார்!

*           பா... ஆளும் குஜராத்தில் கரோனாவால் சாகும் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது.

>>           கரோனா சாவை விடக் கொடிய ஆட்சி முறை இது!

அதனால்தான்

நுழைவுத் தேர்வோ?

*          உயர்கல்வி அளிப்பது அரசின் பொறுப்பு.

- உச்சநீதிமன்றம்

>>           அதனால்தான் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் நுழைந்துவிடக் கூடாது என்கிற வகையில் காலை வெட்டும் நுழைவுத் தேர்வோ!

கரோனா உள்பட!

*           உலக நன்மைக்காக ஆதிபராசக்தி (மேல்மருவத்தூர்) சித்தர் பீடத்தில் பூஜை.

 >>          இதற்கு முன் எத்தனைப் பூஜைகள் நடத்தப்பட்டன, எத்தகைய நன்மைகள் உலகத்திற்கு ஏற்பட்டன என்பதற்கான பட்டியல் உண்டா? (கரோனா உள்பட).

சூராதி சூரராயிற்றே!

*           அண்ணா பல்கலைக் கழகம்மீது - பொறியியல் கல்லூரிகள் அதிருப்தி - இணைய வழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் குளறுபடி.

>>           தகுதிக்கும் - திறமைக்கும் பிறந்த(?) ‘சூரப்பா' துணைவேந்தராக இருந்த நிலையிலா இப்படி?

மானம் இரயிலில்

ஏறுகிறது

*           டிராக்டர்மீது வைகை எக்ஸ்பிரஸ் மோதியதால் தொழிலாளி நிரந்தர ஊனம் - நிவாரண நிதி வழங்குவதில் இரயில்வே துறை தாமதம் - இரயிலை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணை.

>>           மத்திய அரசின் முக்கிய துறையின் நிர்வாக (அவ)லட்சணம் இதுதான்!

வி.பி.சிங் ஆட்சியில்தானே

பாரத ரத்னா' அளிக்கப்பட்டது

*           அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரைக் கவுரவிக்கும் தீர்மானம் வருகிறது.

>>           அண்ணலின் அருமை அமெரிக்காவுக்குத் தெரிகிறது.

அவனன்றி

ஓரணுவும் அசையாது!'

*           கும்பமேளாவுக்கு வந்தவர்களில் 1710 பேருக்குக் கரோனா தொற்று உறுதி.

>>           கருணையே உருவானவன் கடவுள்?'

Comments