தேசியமா? மாநிலமா? - தனித்துவம் என்று இந்தியர்கள் எதை நினைக்கின்றனர்?

தேசம், தேசிய அடையாளம் ஆகி யவை தற்போதைய அரசியலில்  முக்கி யத்துவம் பெறுகின்ற கேள்வியாக பார்க் கப்படுகிறது. ஆனால் ஒருவரின் தேசிய அடையாளத்தை கோருவதற்காக ஒருவர் தன்னுடைய பிராந்திய  மொழியியல் அடையாளத்தை பயன்படுத்துகிறாரா? அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2016 மற்றும் 2018 காலங்களுக்கு இடையே தேர்தலுக்கு நடுவே அரசியலும் சமூகமும் என்ற தலைப்பில் நடத்திய கணக்கெடுப்பின் தரவுகள் மூலம் இந்த கேள்விக்கான பதி லின் தமிழாக்கம்

எந்த அடையாளத்துடன் மக்கள் அதிகம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?

மக்கள் தேசியம் அல்லது பிராந்திய அடையாளத்துடன் தொடர்புபடுத்தப்படு கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதில் வடக்கில் உள்ளவர்கள் 36% பேர் தேசியம் என்றார்கள். 30% பேர் அவர் களின் மாநில அடையாளத்தை கூறினார் கள். 27% நபர்கள் இரண்டு அடையாளத் தையுமே தேர்வு செய்வார்கள் என்று கூறினார்கள்.

மாநிலங்களின் தரவுகள் என்ன கூறுகிறது?

சில இடங்களில் மாநில உணர்வுகள் வலுவாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 65% பேரும், தமிழகத்தில் 56% பேரும், மிசோர மில் 51% பேரும், நாகலாந்தில் 46% பேரும் குஜராத்தில் 37% பேரும் தங்களின் மாநில அடையாளங்களுடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சமீப காலமாக தேசியம் என்ற பார்வை அதி கரித்துள்ளது

அவைகளில் பெரும்பாலானவை இந்தி பேசும் மாநிலங்களாகும். அரியானா (66%), டில்லி (63%), .பி. (61%), ராஜஸ்தான் (51%), பிகார் (48%), .பி. (47%), மற்றும் ஜார்காண்ட் (46%) ஆகிய மாநிலங்களில் தேசிய அடை யாளத்தை மக்கள் விரும்புகின்றனர்.

இரு அடையாளங்களையும் சமமாக முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்கள் மகாராட்டிரா (57%), மேற்கு வங்கம் (44%) மற்றும் திரிபுரா (42%). சத்தீஸ்கர் (50%), உத்தரகண்ட் (44%), பஞ்சாப் (43%), கேரளா (38%) மற்றும் அசாம் (37%) பொது இடங் களில் எந்த மொழி பேச மக்கள் விரும்பு கின்றனர்? உள்ளூர் அல்லது மற்ற மொழி?

மற்ற பிராந்தியங்களுக்கு மக்கள் செல்லும் போது மொழி முக்கியமான இணைப்பு காரணியாகவும், மோதலின் ஒரு புள்ளியாகவும் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர் மொழிகளை கற்கவும் பேசவும் விரும்புகிறார்கள். பொதுத் தொடர்பு முறைகளில் மக்கள் பிராந்திய மொழிகளையே விரும்புகிறார் களா அல்லது தொடர்பு மொழியை ஏற்றுக் கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு, அய்ந்தில் இரண்டு பங்கு (42%) பேர் எந்த மொழியை வேண்டும் என்றாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள். 44% பேர் பிராந்திய மொழிகளை தேர்வு செய்தார்கள்.

பிராந்திய மொழியைத் தவிர வேறு ஒரு மொழியை ஏற்றுக்கொள்வது கருநாடகா வில் மிகக் குறைவானது, அங்கு 83% மக்கள் உள்ளூர் மொழியை பொது இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி யுள்ளனர். மற்ற மொழிகளை விட உள்ளூர் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவும் தரும் மாநிலங்கள் : ஒடிசா (62%), பீகார் (59%),  ஜம்மு காஷ்மீர் (58%) மற்றும் குஜராத் (57%). தனித்த பிராந்திய அடையாளங் களைக் கொண்ட கேரளா மற்றும் நாக லாந்து மாநிலங்களில் மூன்றில் இரண்டு பிரிவு மக்கள் எந்த மொழியை வேண்டு மானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். தெலுங்கானா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ளூர் மொழியைக் காட்டிலும் அதிகம் பேசப் படும் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அரியானாவில் மட்டுமே 37% மக்கள் இந்தி பேசுவதில் எந்த பிரச் சினையும் இல்லை என்றும் ஆனால் ஆங்கிலத்தை பொதுமொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்கள்.

Comments