மம்தாவுக்கு தடை: பாரதீய ஜனதா மற்றும் மத்திய அரசுக்காக செய்யப்பட்டது; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.14 பா.ஜனதாவுக்காக தான் தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்ய தடைவித்து உள்ளதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்குவங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் மதமோதல்களை தூண்டும் வகையில் பேசியதாக மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

இந்தநிலையில் பா.ஜனதாவுக்காக தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்ததாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் மம்தா 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடைவிதித்து உள்ளது.

நேரடி தாக்குதல்

இது பா.ஜனதா மற்றும் ஆளும் மத்திய அரசுக்காக செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இது ஜனநாயகம் மற்றும் இந்திய சுயாட்சி அமைப்புகளின் இறையாண்மைக்கு எதிராக நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் ஆகும்என கூறியுள்ளார்.

இதேபோல ஹரித்துவாரில் நடந்த கும்ப மேளாவில் கலந்து கொண்டு திரும்புவர்களால் கரோனா மேலும் பரவும் வாய்ப்பு இருப்ப தாகவும் தெரிவித்து உள்ளார்.

Comments