வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை, ஏப்.17  வேளச்சேரியில் இன்று (17.4.2021) ஒரு வாக்குச்சாவடியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

சென்னை, வேளச்சேரி சட்டசபை தொகுதியில் .தி.மு.. சார்பில் எம்.கே.அசோக் மற்றும் தி.மு.. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெ.எம்.எச்.அசன் மவுலானா, ..மு.. சார்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வு பெற்ற அய்..எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கீர்த்தனா உள்பட 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள 92-எம் என்ற வாக்குச்சாவடியில் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன், இங்குள்ள ஒரு வி.வி.பேட் எந்திரம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் முறை கேடாக கொண்டு சென்றதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த வாக்குச் சாவடிக்கு தேர்தல் ஆணையம் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேளச்சேரி, சீதாராமன் நகர் முதல் தெருவில் உள்ள டி..வி. பள்ளியில் உள்ள 92-எம் வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5.45 மணியளவில் தேர்தல் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி மற்றும் உதவி தேர்தல் அலுவலர் துளசிராம் ராஜ் ஆகியோர் வாக்குச் சாவடி அலுவலரிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று (17.4.2021) காலை முதல் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

92-வது வாக்குச் சாவடியில் 548 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனால் அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments