ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கதறியவரிடம் ‘‘கன்னத்தில் அறைவேன்'' என்ற பா.ஜ.க. அமைச்சர்

 புதுடில்லி, ஏப்.24 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு, ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கண்ணீர் விட்டு கதறிய நபரிடம், ‘’இரண்டு அறை விடு வேன்,’’ என கொந்தளித்த மத்திய பா... அமைச் சரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.., ஆட்சி நடக் கிறது. இங்குள்ள தாமோ மக்களவை தொகுதியைச் சேர்ந்த, பா.., - எம்.பி., பிரஹலாத் படேல். இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கரோனா தொற்று பரவல் மிகக் கடுமையாக உள்ள, 10 மாநிலங்களில், மத்திய பிரதேசம் இடம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தாமோ மாவட்ட கரோனா சிகிச்சை மய்யத்தில் உள்ள, ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கும் அறைக் குள், சமீபத்தில் புகுந்த நோயாளிகளின் உற வினர்கள், சிலிண்டர்களை திருடிச் சென்றனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், தமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த 22 ஆம் தேதி வந்தார். அப்போது, அமைச்சரை அணுகிய சிலர், தங்கள் உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தன் தாய், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும் தெரிவித்தார்.தயவு செய்து தன் தாயின் உயிரை காப்பாற்றும்படி, அமைச்சர் முன், கண்ணீர்விட்டு கதறினார்.

இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் பிரஹலாத் படேல், ‘’இப்படியே பேசிக் கொண் டிருந்தால், கன்னத்தில் இரண்டு அறை விடு வேன்,’’ என கூறினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comments