கரோனா : ‘சி.பி.எஸ்.இ. தேர்வு’களை ரத்து செய்யுங்கள் மத்திய கல்வி அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்

 புதுடில்லி, ஏப்.12- கரோனாவின் 2ஆவது அலை தீவிரமாகி வருகிறது. இந்த தருணத்தில் சி.பி.எஸ்.. என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார்.

இதையொட்டி அவர் மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரி யாலுக்கு நேற்று (11.4.2021) ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் வலியுறுத்திக் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கரோனா வைரஸ் தொற்று தீவிர மாக பரவி வரும் சூழலில் குழந் தைகளை வலுக்கட்டாயமாக தேர்வு எழுத அமர வைத்து, அந்த தேர்வு மய்யத்தில் நிறைய குழந்தைகளுக்கு கரோனா தாக்குதல் ஏற்பட்டு, அது தீவிர பகுதியாக மாறினால் அதற்கு மத்திய அரசும், சி.பி.எஸ்.. வாரிய மும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதையொட்டி நோயால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய மாணவர் களுக்கோ அல்லது பிறருக்கோ ஏற்படுகிற பாதிப்புக்கு மத்திய அரசும், சி.பி.எஸ்.. வாரியமும் சட்டப் பூர்வமாக பொறுப்பேற்க பரிசீலிக்க விரும்புகின்றனவா?

நாடு முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தினமும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிற நிலையில், கரோனாவின் இரண்டா வது அலைக்கு மத்தியில் லட்சக் கணக்கான குழந்தைகளும், அவர் களது பெற்றோர்களும் தேர்வு மய்யங்களில் கூடி தேர்வு எழுதுவதில் பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த சூழலில் குழந்தைகளை தேர்வு எழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களது பயம் சரியானதுதான் என்பது நிரூ பணமாகும்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் மாணவர்களின் சரியான கோரிக்கை யாக உள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம், பள்ளிகளுடன், மாணவர்களுடன், அவர்களது பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும், அதன் மூலமாக அவர்களது கல்வி கட மைகளை நிறைவேற்ற பாதுகாப்பான வழியைக் கண்டறியும் என நம்புகிறேன்.

அரசியல் தலைவர்களாக நமது பொறுப்பு, அவர்களை பாதுகாப் பதும், வழிநடத்துவதும் ஆகும்.

கூட்டம் கூடுகிற தேர்வு மய்யங் களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை. எனவே சி.பி.எஸ்.. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

சி.பி.எஸ்.. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையும். 12ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

Comments