சி.பிரியா - சி.அறிவழகன் மணவிழா

 கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி நடத்தி வைத்தார்

தருமபுரி, ஏப். 14- தருமபுரி மாவட்டம் காமலாபுரம்  சி.அறி வழகன் - சி.பிரியா ஆகியோரின் மணவிழா பறையிசை. கலை நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி நடத்தி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காமலாபுரம் முனியம்மாள் - சின்ன சாமி ஆகியோரது மகனும், மாவட்ட திராவிடர் கழக மாணவர் கழக துணைச் செயலாளருமான சி.அறிவழகன். கிருட்டிணகிரி மாவட்டம் மாணிக்கனூர் இலட்சுமி பாஞ்சாலை - சின்னதுரை ஆகியோரின் மகள் சி.பிரியா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழா  2.4.2021 அன்று காமலாபுரம் இல்லத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

பறையிசை ஊர்வலம்

முன்னதாக கோவை நிகர் கலைக்கூட பறையிசைக் குழுவினருடன் மணமக்கள் மற்றும் கழகத் தோழர்கள், உறவினர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தந்தை பெரியார் சிலைக்கு கொள்கை முழக்கமிட, மாலை அணிவித்தனர். அதைத்தொடர்ந்து மணவிழா மேடையில் நிகர் குழுவினரின் பறையிசை ஆட்டம் நிகழ்ச்சி நடைப் பெற்றது. தொடர்ந்து பெரியார் பிஞ்சு திருச்சி யாழினி கழகப் பாடலுக்கு நடனமாடினார். அதைத்தொடர்ந்து மணவிழா தொடங்கியது.

மணவிழா

மணவிழா நிகழ்விற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி தலைமை தாங்கினார். ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் இரா.இராஜா வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மண்டலத் தலைவர் .தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் மு.பரமசிவம், கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் .அறிவரசன், மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, மேனாள் மாவட்ட தலைவர் பெ.மதிமணியன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

மணமக்கள் சி.பிரியா - சி.அறிவழகன் ஆகியோருக்கு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி உறுதி மொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். கழகத் தோழர்கள் மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! என ஒலிமுழக்கமிட்டனர்.

வாழ்த்துரை

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், ஓசூர் மாவட்ட தலைவர் சூ.வனவேந்தன், வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், வேலூர் மாவட்டத் தலைவர் மா.சிவக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்பரசன், மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, மாவட்ட மகளிரணி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பங்கேற்றோர்

மணவிழாவில் பங்கேற்ற கழக நிர்வாகிகள் ஓசூர் செல்வி, செல்வம், மணி, லதா, சித.வீரமணி, சித.அருள், ஜான்சிராணி, மா.செல்லதுரை, மேட்டூர் முல்லைவேந்தன், ஊற்றங்கரை கலைமணி, திருச்சி அம்பிகா, யாழினி, வேலூர் தேன்மொழி, காமலாபுரம் சி.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் .கதிர், .மாதன், .தீர்த்தகிரி, கே.ஆர்.குமார், கதிர்செந்தில், பெ.கோவிந்தராஜ், இரா.சேட்டு, கு.சரவணன், .யாழ்திலீபன், .அண்ணாதுரை, .சின்னராஜ், மா.சுதாமணி, இரா.கிருட்டிணமூர்த்தி, சி.காமராஜ், கரு.பாலன், பீம.தமிழ்பிரபாகரன், தீ.ஏங்கல்ஸ், .சமரசம், ஆனந்தன், பிரகாசம், சிறீதரன், .நடராஜன், இராமசாமி, நாகை பாலு, இரா.பரிமளம், தாம்பரம் மாவட்ட தோழர்கள் .முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், சி.வீரவேல், பி.சி.ஜெயராமன், கடலூர் மாவட்ட தோழர்கள் நா.பஞ்சமூர்த்தி, நா.உதயசங்கர். இரா.மணிவேல், கோ.வேலு, .கதிர்வேல், இரா.வேணுகோபால், தஞ்சை தமிழரசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

நிகழ்வின் இறுதியாக மணமகனின் தந்தையார் காமலாபுரம் திராவிடர் கழக கிளைக்கழக தலைவர் இரா.சின்னசாமி நன்றி கூறினார்.

Comments