பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் தீவிர பாதிப்பில்லை: ஆய்வில் தகவல்

லண்டன், ஏப். 14- பிரிட்டனில் பரவும் உருமாற்றமடைந்த கரோனாவினால் தீவிர விளை வுகள் ஏதும் ஏற்படவில்லை என்று அண்மையில் நடத்தப் பட்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் (1117) கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஏற் கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.

அதற்கு ஏற்ப அடுத்த சில வாரங்களில் பிரிட்டனில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது.பிரிட்டனில் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டது. இதனால் கிறிஸ் துமஸ், புத்தாண்டுக் கொண் டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளவும் மக்களுக்கு பிரிட் டன் அரசு அறிவுறுத்தியது.

பிரிட்டனில் பரவிய உரு மாற்றம் அடைந்த கரோனா வைரஸ் (1117) பாதிப்பைப் பார்த்து அய்ரோப்பிய நாடு கள், அமெரிக்கா, இந்தியா, வளைகுடா நாடுகளும் பிரிட் டனுக்கு விமானப் போக்குவ ரத்தை நிறுத்தின.

இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப் படுத்தும் வகையில் பைசர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அரசு அனுமதியளித்தது. உருமாற் றம் அடைந்த கரோனா வைரஸ் தீவிரத்தைப் பார்த்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் தடுப்பு மருந்தையும் மக்களுக்குச் செலுத்த பிரிட் டன் சுகாதாரத்துறை அனு மதி அளித்தது.

இந்நிலையில் பிரிட்ட னின் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உருமாற்ற மடைந்த வைரஸ்களால் உடலில் தீவிர விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில்,  உரு மாற்றம் அடைந்த கரோனா வைரசினால் இறப்புகளோ, பெரிய அளவிலான விளைவு களோ ஏற்பட வில்லை. எனி னும் இந்த ஆய்வை விரிவாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments