முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப்.4 காவல் நிலையங் களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 72 மணி நேரத்துக்குள் அந்தந்தப் பிரிவு சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியபோது, வழக்கின் உணர்வுப்பூர்வமான முக்கியத்து வத்தை உணர்ந்து சில வழக்குகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை என பதில் அளித்துள்ளனர்.

விலக்கு

ஆனால் உச்சநீதிமன்றம், பெண் கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள், தீவிரவாத தன்மை கொண்ட வழக்குகளை மட்டுமே பதிவேற்றம் செய்ய விலக்களித் துள்ளது. இந்த முடிவையும் துணை காவல் கண்காணிப்பாளர் தகுதிக்கு குறைவில்லாத அதிகாரி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விதிவிலக்கை அனைத்துவழக்குகளுக்கும் பொருத்தி முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அறிக்கை

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங் களில் பதிவேற்றம் செய்யாதது ஏன், முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்ய எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன

என் பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.  பின்னர் இது தொடர்பாக தமிழக அரசு  6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Comments