காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு

சென்னை, ஏப்.18 கரோனா பரவல் அதிகரிப்பால் காவலர், தீயணைப்பு பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 2-ஆம் நிலை காவலர் பணியில் மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 (ஆண்கள்), 3,099 (பெண்கள்/திருநங்கைகள்), தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் 6545 (ஆண்கள் மட்டும்), சிறைத் துறையில் 117 (ஆண்கள்), 7 (பெண்கள்), தீயணைப்புத் துறையில் தீயணைப் பாளர் பணிக்கு 458 (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு முடிவு வெளியானது.

இந்தநிலையில் எழுத்து தேர்வில் பெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி தேர்வுகள் வருகிற 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

இதற்கான ஹால்டிக்கெட் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர் வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கரோனா 2ஆவது அலை வேகம் எடுத்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் நேற்று (17.4.2021) அறிக்கை வாயிலாக வலி யுறுத்தினார்.

அவர் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் உடல் தகுதித்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யத்தின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

Comments