ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·   மேற்கு வங்கத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் கூச் பெகார் தொகுதியில் நடைபெற்ற வன்முறையில் சி.ஆர்.பி.எப். நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண் டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு என மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ரபேல் விமானம் வாங்கியது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் உண்மை நிலை விரைவில் வெளிவரும். அதுவரை, அது குறித்த சர்ச்சை மோடி அரசை ஆட்டிப்படைக்கும் என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     திரிபுரா பழங்குடிப் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (டிடிஏஏடிசி) தேர்தலில் சுதேச முற்போக்கு பிராந்திய கூட்டணி 28 இடங்களில் 18 இடங்களை வென்றது. மாநிலத்தை ஆளும் பாஜக மற்றும் சுதேச மக்கள் முன்னணி திரிபுரா (அய்பிஎஃப்டி) இணைந்து ஒன்பது இடங்களை மட்டுமே வென்றுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் மீறி 149 துணை செயலர்களை இயக்கு நர்களாக பதவி உயர்வு அளித்தது, நீதிமன்ற அவமதிப்பு என தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனு தொடர்பாக பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை செயலாளருக்கும் யுபிஎஸ்சி செயலாளருக்கும் உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·   ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பணிகளுக்காக பல்வேறு காலகட்டங்களில் நடத்தப் பட்ட போட்டித் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு காலகட்டங்களில் பொறுப்பில் இருந்த 9 அய்..எஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை மாநில தகவல் ஆணையம் வைத்துள்ளது. இவர்களைக் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்புமாறும் தலைமைச் செயலருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

11.4.2021

Comments