மதம் மாறுவது தனி மனித உரிமை

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,ஏப்.11- மத மாற்றம் செய்வதை தடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு வழி காட்டுதல் வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டதுடன் மதம் மாறுவது தனிமனித உரிமை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது.

உச்சநீதிமன்றத்தில், வழக்குரை ஞர் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:

ஒருவரிடம் நயவஞ்சகமாக, நம்பும்படி பேசி, மத மாற்றம் செய்வதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

 இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க, போதிய வழி காட்டுதல்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், பி.ஆர்.காவாய், ஹிரிஷி கேஷ்ராய் ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயண னிடம், நீதிபதிகள் கூறியதாவது:

இந்த மனுவை எந்த அடிப் படையில் தாக்கல் செய்துள்ளீர்கள் என, தெரியவில்லை. நாட்டில், 18வயது நிரம்பிய ஒருவர், எந்த மதத்தை பின்பற்றவும் உரிமை உள்ளது. அதில் எப்படி நாம் தலையிட முடியும்? ஒவ்வொருவரும், அவர்கள் விரும்பும் மதத்தை தேர்வு செய்துகொள்ளும் உரி மையை, நம் அரசமைப்பு வழங்கி யுள்ளது.

எனவே, மனு மீது தொடர்ந்து வாதாட விரும்பினால், கடும் அப ராதம் விதிக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதனால், மனுவை திரும்பப் பெறுவதாக கூறிய வழக்குரைஞர், தங்கள் கோரிக்கை குறித்து, மத்திய அரசு மற்றும் சட்ட ஆணையத் தில் முறையிட அனுமதி கோரினர்.

கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments