இரவு நேர ஊரடங்கில் தடுப்பூசி போட சென்றாலும் இ-பாஸ் அவசியம்

 புதுடில்லி, ஏப்.8  இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கரோனா தடுப்பூசிமய்யங்களுக்கு நேரில் சென்று  தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள்  -பாஸ் வைத் திருப்பது கட்டாயம் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

டில்லியில் கரோனா தொற்று பரவல் கடந்த சில வாரமாக தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. இதனால், நோய் பரவலை கட்டுப்படுத்த 6.4.2021 அன்று முதல் இரவு நேர ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இந்த இரவுநேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். டில்லியில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 5,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண் ணிக்கை 11,113 ஆக அதிகரித் துள்ளது என மாநில சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு சில கட்டுப் பாடுகளை அரசு விதித்துள் ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் முத லில் கோவின் செயலியில் தங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு இரவுநேர ஊரடங்கு நேரத் தில் வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து காண்பிக்கலாம். ஆனால், முன்பதிவு செய்யா மல் தடுப்பூசி மய்யங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் வெளியில் சென்று வருவதற்கான -பாஸ் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும். டிடிஎம்ஏ  வழி காட்டுதல்களின்படி, இரவு  ஊரடங்கு உத்தரவின் போது தடுப்பூசி போட்டுக்கொள்வ தற்காக வெளியே செல்லும் எவரும் கண்டிப்பாக  -பாஸ் வைத்திருந்தால் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித் தார். பெரும்பாலும் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் வருவதா கவும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, செய்தியா ளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில்: பாது காப்பு விதிமுறைகளை  மக்கள் பின்பற்றாவிட்டால் நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து கடந்த ஆண்டு நவம்பரில் பதிவு  செய்யப்பட்ட கடைசி ஒற்றை நாள் உயர்வு எண்ணிக்கையை கடந்து சாதனை எண்ணாக மாறும் ஆபத்து உளளது என்றார். இரவுநேர ஊரடங்கு நேரத் தில் வந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து காண்பிக்கலாம்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image