ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல் அய்தராபாத்:

·     இந்தியா ரபேல் விமானம் வாங்கியது தொடர்பாக கையூட்டு தரப்பட்டதாக மீடியா ரிப்போர்ட் செய்தி வெளியிட்டது தொடர்பாக, மோடி அரசு உடனடியாக ஓர் விசாரணை ஆணையம் அமைத்து உண்மை நிலையை தெளிவுபடுத்திட வேண்டும் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு மண்டல நிபுணர் உறுப்பினராக தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் விஷயங்களைக் கையாள்வதில் கிரிஜா வைத்திய நாதனுக்கு தேவையான அனுபவம் இல்லை என்று சுற்றுச்சூழல் வழக்குரைஞர் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்ற சில தொகுதிகளில் பா...தான் அதிக இடங்களைப் பெறும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு, அழகான தாதாஎன அமித் ஷாவை வர்ணித்து, அவர் தவறான தகவலைத் தருகிறார் என்றும், இதே போன்று தேர்தல் நடைபெற்ற சில மாநிலங்களில் அமித் ஷா சொன்னதற்கு மாறாக நடந்துள்ளது. அதுவே தான் இங்கேயும் நடைபெறும் எனவும் மம்தா பதிலடி தந்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.. போப்டே, ஓய்வு பெற உள்ள சில நாட்களுக்கு முன்னர், ‘கொலிஜியம்கூட்டத்தை நடத்த முனைவது முன் எப்போதும் நடந்திராத செயல் என கூறப்படுகிறது.

- குடந்தை கருணா

8.4.2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image