கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த துரைமுருகன் குணமடைந்தார்

சென்னை, ஏப்.15 சென் னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டி யிட்டார். தேர்தலுக்கான பிரச் சாரத்தில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா அறி குறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து துரைமுருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தினமும் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகன், சிகிச்சைக்குப் பின்னர் நேற்று (14.4.2021) குணமடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் இரண்டு வாரம் தனிமையில் இருப்பதாகவும் விரைவில் குணமாக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்கம் வரும் 4 மாநில  விமானப் பயணிகளுக்கு'கரோனா இல்லை' சான்றிதழ் கட்டாயம்

கொல்கத்தா, ஏப்.15 மேற்கு வங்காளத்துக்கு வரும்

4 மாநில விமானப் பயணிகளுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவித்துள்ளது.

நாடெங்கும் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கருநாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் விமானப் பயணிகள், பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த, கரோனா இல்லை என்ற ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்காள அரசு நேற்று (14.4.2021) அறிவித்திருக்கிறது.

விமானப் பயணிகள் யாரும், மேற்கு வங்காளத்துக்கு வந்தபின் சோதனை செய்துகொள்வதற்கான வழி இல்லை.

மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தின் பக்டோக்ரா, அண்டால் ஆகிய நகரங்களுக்கு வரும் விமானங்களின் பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்துடன், மேலும் 10 மாநிலங்களும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.

 

மறு வாக்குப்பதிவு நடைபெறும் வேளச்சேரியில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும்

சென்னை, ஏப்.15 மறு வாக்குப்பதிவு நடைபெறும் வேளச்சேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி தொகுதி சீதாராம் நகரில் உள்ள டி..வி. பப்ளிக் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92-இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கதல்ல என்றும், வருகிற 17-ஆம் தேதி அதே வாக்குச்சாவடி மய்யத்தில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மாட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்க ளுக்கான வாக்குச்சாவடி என்பதால், இங்கு கடந்த முறை அனுமதிக்கப்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டிருந்ததால், இந்த மறு வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. மறு வாக்குப்பதிவுக்கு புதிய வாக் குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

அதன்படி ஏற்கெனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த திருவான்மியூரில் இருந்து வாக்குச் சாவடிக்கு புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படும். பின்னர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குப் பதிவு எந்திரம், வாக்கு எண்ணும் மய்யமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வாக்குப்பதிவு நடைபெறும் போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்த இருக்கும் புதிய வாக்குப்பதிவு எந் திரத்தை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி இன்று  (15.4.2021) (வியாழக்கிழமை) மாலை நடை பெறு கிறது. அந்த பகுதியில் ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வழியாகவும் மறு வாக் குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தப் படுகிறது. மேலும், வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள் வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் வழங்கி வருகின்றனர். மேலும் எழுத்துபூர்வமாக கடிதம் வழங்குபவர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Comments