கரோனா தொற்று -மீண்டும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

புதுச்சேரி, ஏப்.9  நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது விரைவில் முழு ஊரடங்காக மாறும் என்ற அச்சத்தால், பல மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே  தொற்று பரவல் புதிய உச்சத்தை  எட் டியுள்ளது. நேற்று (8.4.2021) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,26,789 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  685 பேர் பலியாயினர். இது பதற்றத்தை அதிகரித்து உள் ளது. இதன் காரணமாக, மகாராட்டிரா,  குஜராத், டில்லி போன்ற மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின் றன.

இதனால் அச்சமடைந்த உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டில்லியிலுள்ள ரயில் மற்றும் பேருந்து  நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மீண்டும் கரோனா பரவல் காரணமாக தங்களுக்கு சரியான வேலை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் சொந்த ஊருக்கே போகிறோம் என்று அவர் கள் தெரிவித்துள்ளனர். அதுபோல சென்னையில் இருந்து  வெளியேறும் வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராட்டிரா மாநிலத் தில் சொந்த ஊர் திரும் பும் புலம்பெயர் தொழி லாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவை வழங்கி, அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Comments