புரோக்கருக்கு லஞ்சம் கொடுத்த டசால்ட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

 சென்னை, ஏப்.6  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (6.4.2021) வெளியிட்ட அறிக்கை: இந்தி யாவில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்துக்கும் சிகரம் வைத்ததுபோல் விளங்கியது தான் மோடி ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல். தற்போது, பா... ஆட்சியில் வாங்கப்பட்ட ரபேல் போர் விமான கொள்முதலில் இடைத் தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கப்பட்டதாக, பிரான்சு நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த தொகையை ரபேல் போர் விமான தயாரிப்பு நிறுவன மான தசால்ட் வழங்கியுள் ளதாக கூறப்படுகிறது.

இது அந்த நாட்டின் ஊடகங்களில் செய்தியாக பரபரப்புடன் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே ரபேல் போர் விமான கொள் முதல் குறித்து எழுப்பட்ட குற்றச்சாட்டிற்கு இன்றைக்கு ஆதாரம் வெளியாகி இருக் கிறது. இடைத்தரகருக்கு லஞ்சமாக பணம் கைமாறி இருக் கிறது. இதுகுறித்து, பாரபட் சமற்ற சுயேட்சையான விசா ரணை நடத்தப்பட வேண் டும். ஏனெனில், இது பாது காப்புத்துறை சம்மந்தப் பட்டது என்பதால் அதிக கவனத்தை செலுத்த வேண் டும்.

இந்தியாவின் பாது காப்புத்துறை கொள்முதலில் இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்த டசால்ட் நிறுவ னத்தை தடை செய்வதோடு, அந்த நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும்.

Comments