இதுதான் குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் சாதனை ஒரே சிதையில் வீசப்படும் உடல்கள்

அகமதாபாத், ஏப்.17 குஜராத்தில் கட்டுக்கடங்காமல் செல்லும் கோவிட் மரணத்தால் நிலமை மோசமாகி உள்ளது.

ஏப்ரல் இரண்டாம் வாரம் முதலே அங்கு தொடர்ந்து பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கிறது, இது தொடர்பாக அரசு அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களும் முடிந்தவரை மறைத்தே வந்தன. ஆனால் எப்ரல் 10 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை மோசமாகி முக்கிய நகரங்களில் மருத்துவமனைச் சாலைகளில் உடல்களை ஏற்றிய அமரர் ஊர்திகள் சுடுகாட்டில் எரியூட்ட இடமின்றி அப்படியே நின்று விட்டது,

 சில நாட்களுக்கு முன்பு எரியூட்டப்படுவதற்காக வரும் உடல்களை ஆங்காங்கே உள்ள மைதானங்களில் உடல்களை வைக்க உத்தரவிட்டதால் மைதானங்களிலும் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது, இந்த நிலையில் மைதானங்களில் உள்ள உடல்களை அப்படியே எரித்துவிடலாம் என்று நகர நிர்வாகம் அனுமதி கொடுத்ததை அடுத்து ஒரே சிதையில் 5 உடல்களை அடுக்கி எரியூட்டிக்கொண்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக அகமதாபாத் டைம்ஸ் ஆப் இந்தியா தலைப்புச்செய்தியாக வெளியிட்டுள்ளது.   அதில் ஒரே சிதையில் அய்ந்து பிணங்கள் எரிக்கப் பட்டு வருகிறது, ஆகையால் இறுதிச்சடங்கு செய்ய சாம்பலை அள் ளாமல் இறந்தவர்களின் செருப்பு, ஆடை, அவர்கள் பயன் படுத்திய பொருட்களை எரித்து அந்தச்சாம்பலை நீர் நிலையில் கரைத்து விடும் நிகழ்வுகள் நடப்பதாக எழுதி யுள்ளது.

கரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்!

பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை, ஏப். 17  கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது.  நாளுக்கு நாள்  அதிகரித்துவரும் பெரும்தொற்று காரணமாக,  பல மாநிலங்களில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் (14.4.2021) 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் மட்டும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, கரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப் பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5,476 கோடியை உத்தவ் தாக்கரே அரசு ஒதுக்கியுள்ளது. இநத் நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நிலநடுக்கம், அதிகனமழை, வெள்ளம் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நிதியுதவிகள் வழங்கப்படும் வழக்கம். அதுபோல, கொரோனா பெருந்தொற்று பரவலையும் இயற்கை பேரிடராக அறிவித்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயற்கை பேரிடர் சமயங்களில் வழங்கப்படும் தனிப்பட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்துள்ளார்.

"பெரியார் .வெ.ரா. சாலை" பெயர் மாற்றம்இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை,ஏப்.17- சென்னை-பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ‘பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலைஎனப் பெயரிடப் பட்டிருந்தது. இதைத் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில்Grand Western Trunk Roadஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை, பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி எதிரே 15.4.2021 அன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Comments