இராஜபாளையத்தில் புதுப்பொலிவுடன் தந்தை பெரியார் படிப்பகம் - தோழர்களுக்கு பாராட்டு

 தொகுப்புநூலகர் வே.ராஜவேல், தஞ்சை

மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ள தொழில் நகரம் இராஜபாளையம். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றா லத்திற்கு செல்லக் கூடிய அத்துணை வாகனங்களும் இராஜபாளையம் நகரை கடந்துதான் செல்லவேண்டும். அந்த வகை யில் குற்றாலத்திலிருந்து மதுரை நோக்கி செல்லும் சாலையில் இராஜபாளையத்திற்கு நுழைவாயிலாய், அனைவரையும் வரவேற் கும் அடையாள குறியாய், இராஜபாளையத் திற்கான முகவரியாய் அறிவுலக பேராசான் தந்தை பெரியாரின் சிலை அமைந்துள்ளது.

அதனை ஒட்டியே தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவு படிப்பகம் ஆரம்ப காலத்தில் ஓலைக் கூரையுடன் மண்சுவரு டன் செயல்பட்டு வந்துள்ளது. பின்னர் 14.6.1996 அன்று காங்கிரீட் கூரை மற்றும் செங்கல் சுவருடன் புதிதாக கட்டப்பட்ட பெரியார் நூற்றாண்டு நினைவு படிப்ப கத்தை அன்றைய கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்தப் படிப்பகத்தினால் பொதுமக்கள், ஓய்வூதியர்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறுபட்ட பயனாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். சற்று பழுதாகிய நிலையில் இருந்த படிப்ப கத்தின் கட்டடத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீரமைக்கும் நோக்கத்தில் விருதுநகர் மாவட்டத் தலைவர் இராஜ பாளையம் இல.திருப்பதி முயற்சியில் கழக தோழர்களின் உதவியுடன் 2020 டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டது.

இராஜபாளையத்தில் உள்ள அனைத் துக் கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் வணிகப் பெருமக்கள், அரசு ஊழியர்கள், கணினித் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் ஆதரவு டன், நன்கொடைகளையும் பெற்று  2021 மார்ச் இறுதியில் ரூ.4,57,500 செலவில், பொலிவுமிக்க வகையில் தந்தை பெரியார் படிப்பகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதுப்பொலிவு பெற்ற பெரியார் படிப்பகம்

படிப்பகத்தின் முகப்பில் இருக்கும் தந்தை பெரியார் சிலை முதல் படிப்பக கட் டடம் முழுமையும் வண்ணப் பூச்சுகளால் மிளிர்கின்றன. படிப்பகத்தின் பெயர் அமைந்துள்ள முன்பக்க சுவரில் இருபக்க மும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் படங்கள் கிரானைட் கல்லினால் செய்யப்பட்டு கண்கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. படிப்பகத்தின் வாயில் கதவில் தந்தை பெரியார் உருவம் மற்றும் பெரியாரின் மிக உயரிய பொன் மொழியான "கடவுளை மற மனிதனை நினை" என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. படிப்பகத்தின் தரை மற்றும் சுவர்களில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. படிப்பகத்தின் உட்பக்கம் இரண்டு மின்விசிறிகள் மற்றும் நான்கு மின்சார விளக்குகளுடன் திரா விடர் கழக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்புறத்தில் திரா விட இயக்கத் தலைவர்களான நீதிக் கட்சி தலைவர்கள் தொடங்கி தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர்,  தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரது படங்கள் காலவரிசைப்படி மிக நேர்த்தியாக காட்சி யளிக்கின்றன.

அலுவலகத்திற்கு புதிய வரவுகளாக கண்ணாடி பதிக்கப்பட்ட புதிய பீரோ, அலுவலக மேஜை, 25 நாற்காலிகள் கலந்து ரையாடல் கூட்டம் போன்ற சிறு கூட்டங் கள் நடத்துவதற்கு ஏற்றவாறு ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கிகள் வாங்கப்பட்டுள் ளன. பழுதடைந்து இருந்த மாடிப் படிக் கட்டுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் இருந்த பழைய காரைகள் (கான்கிரீட்) நீக்கப்பட்டு புதிய காரை போடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலை மற்றும் படிப்பகம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் வகையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அலுவலகத்திற்குள் உள்ள திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அலுவலகத்திற்கு முன் பகுதியில் விடுதலை, உண்மை உள்பட அனைத்து நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் படிக்க ஏற்றவாறு மின்விசிறியுடன்  வாசிப்பு இடம் அமைக்கப்பட்டுள்ளது.

தோழர்களுக்கு பாராட்டு

பார்ப்பவர்கள் அனைவரும் பெரியார் படிப்பக எழில்மிகு தோற்றம் கண்டு, வியக் கும் அளவிற்கு இவ்வளவு அழகாக, நேர்த் தியாக பெரியார் படிப்பகம் இராஜபாளை யம் பிரதான சாலையில் அமைவதற்கு விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப் பதி, நகர தலைவர் பூ.சிவக்குமார், நகர செயலாளர் இரா. பாண்டிமுருகன் மற்றும் தி.மு.. 35ஆவது வார்டு செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் மூன்று மாத காலம் உழைத்த தோழர்கள் ஆவார். 19.4.2021 அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இராஜபாளையம் வருகை புரிந்து புதுப் பொலிவு மிக்க படிப்பகத்தை பார்வையிட்டு இவ்வளவு சிறப்பாக ,நேர்த்தியாக சீரமைத் திருக்கக்கூடிய மாவட்ட தலைவர் இல. திருப்பதி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த கழகத் தோழர்கள், அரசியல் பிர முகர்களை பாராட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

மரக்கன்று நடுதல்

20.4.2021 அன்று படிப்பகத்தின் வலது புறம், நிழல் உருவாகும் வகையில், ஆக்சி ஜன் வாயு அதிக அளவில் வெளியிடும் இரண்டு புங்கைமரக்கன்றுகள்  திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி ஆகியோரால் நடப்பட்டது. தி.மு.. 35ஆவது வார்டு செயலாளர் குழந்தைவேலு மற்றும் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

தோழர்களை சந்தித்து நலம் விசாரிப்பு மற்றும் திராவிட பொழில் இதழுக்கு சந்தா சேர்ப்பு

19, 20.4.2021 ஆகிய இரு நாள்களில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், இராய கிரி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழகத்தோழர்கள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து நலம் விசாரித்து திராவிடப்பொழில் இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்பட்டது. இராஜபாளையம் நகர தலைவர் பூ.சிவக்குமார், நகரச் செயலாளர் இரா.பாண்டிமுருகன், மதிமுக வெளியீட்டு செயலாளர் நவபாரத் என்.பி.நாராயண ராஜா,  தி.மு.. நகர செயலாளர் பொ. இராம மூர்த்தி, தி.மு..மாவட்ட மகளிரணி செய லாளர் சுமதிராமமூர்த்தி, தி.மு.. 35ஆவது வார்டு பகுதி செயலாளர் குழந்தைவேலு, நவபாரத் பள்ளி தாளாளர் கணேசன், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பழக் கடை கோவிந்தன்-கார்த்திகா கோவிந்தன் ஆகியோர் அன்போடு வரவேற்று, உபச ரித்து, தமிழர் தலைவர் அவர்களின் நலம் விசாரித்து, சந்தாக்களை வழங்கி மகிழ்ந் தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி அவர்களது மகன் கரோனா ஊரடங்கு காலத்தில் இறந்து விட்டார், அந்த துக்கத்தினை விசாரித்திட, குருசாமி அவர்களின் இராயகிரி இல்லம் சென்று நலம் விசாரிக்கப்பட்டது. தமிழர் தலைவர் முதல் தொண்டர் வரை அனை வரின் நலன் பற்றி விசாரித்துவிட்டு, திரா விட பொழில் இதழுக்கு சந்தாவும் வழங் கினார். இராஜபாளையம் பெரியார் படிப் பகம் புதுப்பிப்பு பணிக்கு தனது பங்காக ரூ10,000 வழங்கி மகிழ்ந்தார்.

தோழர்களின் எதிர்பார்ப்பு

இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று நீங்கியவு டன் புதுப் பொலிவு பெற்றிருக்கும் பெரி யார் நூற்றாண்டு நினைவு படிப்பகத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் வருகை தர வேண்டும் என்பது இராஜபாளையம் திரா விடர் கழகத் தோழர்கள், பல்வேறு அர சியல் கட்சியினர் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments