மாநில அரசுகள் கடும் நிதிச்சுமையை சந்தித்து வரும் சூழலில் - கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் நியாயமற்றது:

 பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை, ஏப். 27 -மாநில அரசு கள் கடும் நிதிச் சுமையை சந் தித்து வரும் சூழலில், கரோனா தடுப்பூசியின் மாறுபட்ட விலை முறையானது முற்றி லும் நியாய மற்றது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து பிரதம ருக்கு அவர் எழுதிய கடிதத் தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 3ஆம் கட்ட கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான புதிய கொள்கையை சமீபத் தில் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அந்த கொள்கையில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்க ளுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி களை கொள்முதல் செய்வது மற்றும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு என்று கூறப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகள், உற்பத்தி யாளர்கள் முன்கூட் டியே நிர்ணயித்த விலையில்தான் மாநில அரசுகளால் வாங்கப்படுகின்றன. இந்த விலையானது மத்திய அர சால் தடுப்பூசி விநியோகத் துக்கு வழங்கப்பட்டுள்ள விலையில் இருந்து மாறு பட்டதாக உள்ளது.

சில தடுப்பூசி உற்பத்தியா ளர்கள் மாநில அரசுகளுக் கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. மாநில அரசுகள் கடும் நிதிச் சுமையை சந்தித்து வரும் சூழ லில், இந்த மாறுபட்ட விலை முறையானது முற்றிலும் நியாயமற்றதாகும். மத்திய அரசைவிட மாநில அரசு களின் நிதி ஆதாரம் குறை வாக உள்ள நிலையில் இது அநீதியான தாகும்.

கரோனா தடுப்பூசி திட் டத்துக்கு 2021--2022 நிதி யாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசுகளின் நியாயமான எதிர்பார்ப் பாகும்.

எனவே, 18 முதல் 45 வய துக்கு உட்பட்டவர்களுக்கு வழங்குவ தற்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும். மேலும், வரும் வாரங் களில் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங் குவதை உறுதி செய்ய இறக்குமதி உள்ளிட்ட இதர வழிகளை கண் டறிய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments