செய்தியும், சிந்தனையும்....!

22 காரட் ஜோதிடர் உண்டா?

*           44 சவரன் ஏமாற்றிய போலி ஜோதிடர் கைது!

- ‘தினமலர்'

>>           அது என்ன போலி ஜோதிடர்? ஜோதிடத்தை ராஜாஜியே ஒப்புக்கொள்ளவில்லையே!

ஞாபகத்தில் வைத்திருங்கள்!

*           தற்போதைய ஆட்சியே நீடிக்கும் - ‘பிலவ' பஞ்சாங்கம் கணிப்பு.

- ‘தினமலர்'

>>           மே இரண்டுவரை அற்ப சந்தோசம் அடையட்டுமே!

இதுதான் பா... தேசியமா?

*           திரிணாமுல், காங்கிரஸ், இடதுசாரிகள் வெளி மாநிலத்தவர்களின் வாக்குகளை நம்பி உள்ளனர்.

 - உள்துறை அமைச்சர் அமித்ஷா

>>           இது மட்டும் பிரிவினைவாதம் இல்லையா?

அக்ரகார (.தி.மு..)தி.மு.வாயிற்றே!

*           பெரியார் பெயரில் இருந்த சாலையை மாற்றியதற்குத் தலைவர்கள் கண்டனம்!

>>           எரிமலையில் கை வைத்துவிட்டது .தி.மு.. அரசு. அதன் பலனை அனுபவிக்கும்.

சபாஷ், சரியான பதிலடி!

*           தனது ஒரு நாள் பிரச்சாரத்தைத் தடை செய்த தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா - தர்ணா போராட்டம் நடத்தினார்.

>>           ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்.

மங்களம் - அபராதம்!

*          மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவு செய்ய கூடுதல் கட்டணம்.

- தமிழக அரசு ஆணை

>>           ஆக, மங்களகரமானது என்றால், மக்களுக்கு அபராதமோ?

கடவுள் பாத்துப்பார்!'

*          கும்பமேளா - கங்கையில் லட்சக்கணக்கான மக்கள்புனித நீராடல்!'

>>           அதனால் என்ன வெறும் ஆயிரம் பேருக்குத்தானே கரோனா!

திருவிழா அல்ல - போர்க்காலம்!

*          தமிழ்நாட்டுக்குத் தடுப்பூசி போர்க்கால அடிப்படையில் அனுப்பவேண்டும்.

- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்

>>           சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் - திருவிழா அல்ல - ‘போர்க்காலம்!'

Comments