டெல்டா மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்று

திருச்சி, ஏப்.17 சுகாதாரத்துறை வழி காட்டுதல்களை பின்பற்றி கரோ னாவை கட்டுப்படுத்தவும், 45 வயதைக் கடந்தவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை யின் தொடக்கம் தஞ்சையில் முதலில் அதிகமாக உணரப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளை தொற்றிய கரோனா அடுத்தடுத்து அவர்களின் குடும்பத்தினரையும் ஆட்கொண்டது. தேர்தலுக்கு முன்பே தினசரி பாதிப்பு தஞ்சையில் மட்டும் 100-அய் எட்டியது.

திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் கரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. 15.4.2021 அன்று பரிசோதனை முடிவில் டெல்டா மாவட்டங்களில் 763 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு கரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 216 பேருக்கு 15.4.2021 அன்று கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. மேலும் திருவா ரூரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் காய்ச்சல், சளி போன்ற கரோனா அறிகுறியுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 5 தினங் களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

தஞ்சாவூரில் 158 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 157 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 51 பேருக்கும், புதுக்கோட்டையில் 49 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கும், பெரம்பலூர் மாவட் டத்தில் 2 நபர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமும் கரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வது சுகாதாரத் துறைக்கு தலைவலியை ஏற்படுத்தி யுள்ளது.

சந்தை மற்றும் கடை வீதிகளில் வெகுஜன மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர்.

அதே போன்று பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள் ளது. ஆனால் மாநகர பேருந்துகளில் நின்று கொண்டும், புறநகரில் உள்ள கிராமங்களுக்கு படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும் ஏராளமான மக்கள் பயணம் செய்கிறார்கள்.

இதுபோன்ற அலட்சியங்களால் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

ஆகவே சுகாதாரத்துறை வழிகாட்டு தல்களை பின்பற்றி கரோனாவை கட்டுப்படுத்தவும், 45 வயதைக் கடந்தவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண் டுள்ளனர்.

Comments