பொதுக்குழு உறுப்பினர் சிங்கை ஆறுமுகம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

கோவை ஏப்.23- சிங்கை ஆறுமுகம் மறைவுக்கு திராவிடர் கழக கோவை மண்டல செயலாளர் .சிற்றரசு தலைமையில் இறுதி மரியாதை கூட்டம் வீரவணக்க முழக்கத்தோடு நடைபெற்றது. பொதுக்குழு உறுப் பினர் சிங்கை ஆறுமுகத்துக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் விடுத்திருந்த இரங்கல் அறிக்கையின் நகல் அனைவருக்கும் அளிக்கப் பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் சிங்கை ஆறுமுகத்திற்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் கோவை மாவட்டத் தலைவர் .சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி..செந்தில் நாதன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் இராசி பிரபாகரன், மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர் மு.தமிழ்செல்வம், மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல், மாவட்ட துணை செயலாளர் திக காளி முத்து, மாநகர தலைவர் புலிய குளம் .வீரமணி, மாநகர அமைப்பாளர் மே..ரங்கசாமி,  தமிழ்முரசு, பழ அன்பரசு, கணபதி தமிழ்செல்வன், வெள்ளலூர் ஆறுமுகம், கு.வெ.கி.செந்தில், புண்ணியமூர்த்தி, புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, வெற்றிசெல்வன், கணபதி காமராஜ், வெங்கிடு, சூசை ராஜ், கதிர்வேல், புலிய

குளம் தருமலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, மாணவர் கழகம் ..யாழினி, .மு.ராஜா, பொள்ளாச்சி கழக தோழர்கள் மாரிமுத்து, ஆனந்த், வீரமலை, நாகராஜ் மற்றும் திமுக சார்பில் சிங்கை பிரபாகரன், ஜீவா,சோமசுந்தரம்,  பன்னீர்செல்வம், நேருதாஸ், நிர்மல், அப்துல் கரீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

Comments