ஊதியம், ஓய்வூதியம் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளாகும் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஏப். 9- ஊழியர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்றவைஅனைத்து ஊழியர்களுக்குமான அடிப்படை உரிமைகளாகும் என்றும், நிதி இல்லை என்று கூறி அதனைத் தராமல் கால நீட்டிப்பு மேற்கொள்வது கூடாதுஎன்றும் டில்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள் ளது.

வடக்கு டில்லி மாநக ராட்சி, தங்கள் மாநகராட்சி க்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் தங்கள் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் காலத்தே ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வழங்க முடியவில்லை என்றும் எனவே இதற்கு ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கால அவகா சம் அளிக்க வேண் டும் என் றும் கோரி மனுச் செய்திருந் தது.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, டில்லி உயர்நீதிமன்ற நீதியரசர் கள் விபின் சாங்கி மற்றும் ரேகா பள்ளி ஆகியோ ரடங்கிய அமர்வாயம் இவ் வாறு தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்றம், ஏற்கனவே டில் லியில் உள்ள மூன்று மாநக ராட்சிகளும் தங்களுடைய ஊழியர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் நிலுவை எதுவு மின்றி ஊதியத்தையும், ஓய்வூ தியத்தையும் ஏப்ரல் 5க்கு முன் அளித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து வடக்கு டில்லி மாநகராட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட போதே, உயர்நீதிமன்ற நீதி பதிகள் இவ்வாறு தீர்ப் பளித் துள்ளார்கள். அவர்கள் மேலும் அத்தீர்ப்பில் கூறியிருப்பதா வது:

நிதி இல்லை என்பது காரணியாக இருக்கக் கூடாது

ஊதியம் மற்றும் ஓய்வூதி யம் என்பவை ஊழியர்கள் அல்லது ஓய்வூதியர்களின் அடிப்படை உரிமைகளாகும்.ஊதியம் பெறும் உரிமையும், ஓய்வூதியம் பெறும் உரிமை யும் அரசமைப்புச் சட்டத் தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரத் திற்கான உரிமை யின் ஓர் அங்கமாகும்.இவர் களுக்குக் காலத்தே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அளித்திட போதுமான நிதி இல்லை என்று கூறுவது ஒரு காரணி யாக இருந்துவிட முடியாது.

இவ்வாறு உயர்நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள் ளார்கள்.

Comments